காசநோய் சிறப்பு முகாம்
கம்பம் மாலையம்மாள்புரத்தில் காசநோய் கண்டறிவது குறித்து சிறப்பு முகாம் நடந்தது.
கம்பம் மாலையம்மாள்புரத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 50 பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்து கம்பம் நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் வந்து பரிசோதனை செய்து கொண்டனர்.