காசநோய் கண்டறியும் முகாம்
சாத்தான்குளம் அருகே அருளூர், செம்மன்குடியிருப்பில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அருளூர், செம்மன்குடியிருப்பில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் 540 பேரை பார்வையிட்டு 8 பேரிடம் அறிகுறிக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. காசநோய் அலகு ஊழியர்கள் ஜெயவண்ணன், பார்த்திபன் ஆகியோர் வீடு, வீடாக சென்று சர்வே எடுத்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், இடைநிலை சுகாதார செவிலியர்கள் மெர்சி, நாகவள்ளி, மகேஸ்வரி, டெங்கு மஸ்தூர், ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.