தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பலி
வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பலியானார்.
ஜோலார்பேட்டை
வாணியம்பாடிைய அடுத்த பெருமாள்பேட்டை ஆலங்காயம் கிராஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தியின் மகன் வெங்கடேசன் (வயது 42), கம்பி பிட்டர். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், அலேக்ஸ், பவித்ரா என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர். நேற்று காலை வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே வெங்கடேசன் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடியை நோக்கி சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தைக் கைப்பற்றி பிரேப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.