கார் மோதி லாரி டிரைவர் பலி

கார் மோதி லாரி டிரைவர் பலியானார்.

Update: 2023-05-28 19:07 GMT

தாயில்பட்டி, 

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த அன்பின் நகரம் அசேபா காலனியை சேர்ந்தவர் லயோலா பிரான்சிஸ் (வயது 54). லாரி டிரைவர். இவர் பணி முடிந்து ஊருக்கு ஏழாயிரம் பண்ணை வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். இவருடன் அன்பின் நகரம் தெற்கு தெரு காலனியை சேர்ந்த கருப்பசாமி (43) என்பவரும் உடன் வந்தார். அப்போது ஏழாயிரம்பண்ணையில் இருந்து சாத்தூருக்கு சென்று கொண்டிருந்த கார் பழைய ஏழாயிரம்பண்ணை பஸ் நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் மோதியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி சாலையில் விழுந்தனர். அவர்கள் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் லயோலா பிரான்சிஸ் இறந்தார். கருப்பசாமி மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவர் படந்தால் நடுத்தெருவை சேர்ந்த சரவணன் (38) என்பவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்