சரக்கு ஆட்டோ மீது லாரி மோதல்

வேலூர் அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியது.

Update: 2022-11-30 13:07 GMT

பெங்களூருவில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோ சென்னை நோக்கி சென்றது. வேலூரை அடுத்த பெருமுகை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 4 மணி அளவில் வந்த போது திடீரென ஆட்டோ டயர் பஞ்சராகியது.

இதையடுத்து டிரைவர் மற்றும் கிளீனர் பஞ்சரான டயரை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பின்னால் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனால் டிரைவரும், கிளீனரும் சாலையோரம் ஓடினார்கள். லாரி எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. அதன் பின்பகுதியில் இருந்த வாழைக்காய், வாழைப்பூ சாலையோரம் சிதறின. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று கிரேன் மூலம் ஆட்டோவை அப்புறப்படுத்தினர். அதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்