2 லாரிகள் மோதல்; டிரைவர் சாவு

ஓசூர் அருகே 2 லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-11-15 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே 2 லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாகஇறந்தார்.

லாரிகள் மோதல்

கிருஷ்ணகிரி அருகே ஆவத்தவாடியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் ஓசூரில் கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலை அருகேயுள்ள ஒரு கிரஷர் பகுதியில் லாரியை ஓட்டி வந்தார். அப்போது, முன்னால் சென்ற லாரி, திடீரென்று பிரேக் பிடித்து நின்றது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த சக்திவேல் ஓட்டி சென்ற லாரி முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி சக்திவேல் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்