ஸ்கூட்டர் மீது லாரி மோதல்;தொழிலாளி உடல் நசுங்கி சாவு

வெள்ளமடம் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் தொழிலாளி உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-13 18:45 GMT

ஆரல்வாய்மொழி:

வெள்ளமடம் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் தொழிலாளி உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் அருகே உள்ள துரைகுடியிருப்பை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 66). இவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு விஜயா(63) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

அய்யாத்துரை ஒவ்ெவாரு வாரமும் சனிக்கிழமை ஊருக்கு சென்றுவிட்டு திங்கட்கிழமை காலையில் மீண்டும் வேலைக்காக நாகர்கோவிலுக்கு திரும்புவது வழக்கம்.

லாரி மோதியது

அதன்படி நேற்று காலை வேலைக்கு திரும்புவதற்காக ஊரிலிருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். வெள்ளமடம் அரசு பள்ளிக்கூடம் அருகே வந்தபோது, முன்னால் சென்றுெகாண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால், அய்யாத்துரையும் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி நிற்காமல் அய்யாத்துரை மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த அய்யாத்துரை லாரியின் சக்கரத்தில் சிக்கினார். இதில் சக்கரம் ஏறி இறங்கியதில் அய்யாத்துரை சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் மீது வழக்கு

இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அய்யாத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ஆனந்த் (43) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்