அரசு பஸ் மீது லாரி மோதல்; 9 பேர் படுகாயம்
திருமயம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு பஸ் மீது லாரி மோதல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து அரசு பஸ் ஒன்று 20 பயணிகளுடன் திருமயம் வழியாக திருச்சி-ராமேஸ்வரம் பைபாஸ் சாலையில் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருமயம் அடுத்துள்ள நமணசமுத்திரம் பைபாஸ் சாலையில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்ல பஸ் திரும்பிய போது எதிரே வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் பஸ்சிலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டு பலத்த காயம் அடைந்தார். மேலும் இந்த விபத்தில் லாரி டிரைவர், அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். லாரி மோதியதில் அரசு பஸ்சின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது.
தீவிர சிகிச்சை
இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படுகாயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.