பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி
திருக்கோவிலூரில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் குருநாதன் மனைவி சுலக்சனா(வயது 49). இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்புள்ள கடையில் இருந்தார். அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென சுலக்சனா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே அவர் தனது சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். உடனே அந்த நபர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.