மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-26 19:15 GMT

குழித்துறை,:

மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஜோதிஷ் ஆகியோர் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக களியக்காவிளை நோக்கி ஒரு பயணிகள் ஆட்டோ வந்தது. அதை அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அதற்குள் அதன் டிரைவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

அந்த ஆட்டோவில் அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது அந்த ஆட்டோவுக்குள் 10 மூடைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அது கேரளாவுக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ஆட்டோவையும் அதிலிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியையும் அவர்கள் பறிமுதல் செய்து காப்புக்காட்டில் உள்ள நுகர் பொருள் வாணிப கிட்டங்கியில் அரிசியை ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்