திருச்சி மாவட்ட செய்தி சில வரிகளி்ல்...

திருச்சி மாவட்ட செய்தி சில வரிகளி்ல்...;

Update:2023-09-02 00:48 IST

மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

*திருச்சி மின் பகிர்மான வட்டம் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி செயற்பொறியாளர் மண்ணச்சநல்லூர் உபகோட்ட அலுவலகம் மற்றும் உதவி மின்பொறியாளர் கிழக்கு மண்ணச்சநல்லூர் பிரிவு அலுவலகம் கதவு எண்.9, நத்தம்வாரிதெரு, திருப்பஞ்சீலிசாலை, மண்ணச்சநல்லூர் (தாலுகா) திருச்சி மாவட்டம் என்ற முகவரியில் இயங்கி வந்த மேற்கண்ட அலுவலகங்கள் நேற்று முதல் கதவு எண்.2/12, எஸ்டி-1, இந்திராநகர், 6-வது தெரு, மண்ணச்சநல்லூர் (தாலுகா), திருச்சி மாவட்டம் என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இந்த தகவல் மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாலயம்

*மணப்பாறையை அடுத்த மரவனூரில் பழமையான அரியநாச்சியம்மன் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஊர் நாட்டாண்மை கபில்தேவ் தலைமையில் பாலாலயத்திற்கான சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

பறவைக்கு சிகிச்சை அளித்த போலீசார்

*ஜீயபுரம் போலீசார் நேற்று முக்கொம்பு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிறிய பறவை ஒன்று அடிபட்டு மயக்க நிலையில் சாலையில் கிடந்தது. இதைகண்ட போலீஸ்காரர்கள் சரவணன், கார்த்தி, சோமசுந்தரம் ஆகியோர் பறவை மீட்டு முதலுதவி சிச்சை அளித்து பாராட்டினர்.

கலெக்டர் ஆய்வு

*முசிறி அருகே சாத்தனூர், இலுப்பையூர், கரட்டாம்பட்டி பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம்

*திருச்சி ஆழ்வார் தோப்பு உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த விராலிமலை சண்முகம், மாதவன், சின்னசாமி ஆகியோர் நினைவிடம் அமைந்துள்ளது. இந்தநிலையில் இந்த நினைவிடங்கள் உரிய பராமரிப்பு இன்றி இருப்பதாக தமிழ்மொழி ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. இதைத்தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் நேற்று அந்த நினைவிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் 3 நினைவிடங்களையும் மணிமண்டபமாக மாற்றி அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

*திருச்சி மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி துறையூர் கோட்டத்தில் வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 8-ந் தேதி, லால்குடி கோட்டத்தில் 12-ந் தேதி, திருச்சி கிழக்கு கோட்டத்தில் 15-ந் தேதி, திருச்சி நகரிய கோட்டத்தில் 19-ந் தேதி, மணப்பாறை கோட்டத்தில் 26-ந் தேதி குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மேற்கண்ட நாட்களில் அந்தந்த கோட்டத்துக்குட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விபத்தை தடுக்க நடவடிக்கை

*மணிகண்டம் அருகே திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அளுந்தூர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் அப்பகுதிமக்கள் நேற்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் கோரிக்கை வைத்த சில மணி நேரத்தில் அப்பகுதியில் போக்குவரத்து போலீசார் பேரிகார்ட் அமைத்து கண்காணித்தனர். இதற்குஅப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்