உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
கந்தர்வகோட்டையில் உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினரால் தீ விபத்து மற்றும் மீட்பு பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக தீயணைப்பு மீட்பு பணி நிலையங்களில் உள்ள நினைவுத்தூண் முன்பாக மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு, தீ பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு முறைகள் பற்றியும், தீயணைப்பு கருவிகளை கையாளுகின்ற முறை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் பொருள் தொடர்பான துண்டு பிரசுரங்களை வினியோகித்தும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இந்த நிகழ்வில் தீயணைப்பு நிலைய அலுவலர் குமரேசன் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள்.