கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி
கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே என்.புதூரில் சுமார் 20 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட கோவில் காளை நேற்று வயது முதிர்வு காரணமாக இறந்தது. இதனால் சோகமடைந்த கிராம மக்கள் இறந்த கோவில் காளையின் உடலை தாரை தப்பட்டம் முழங்க முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். வழிநெடுகிலும் பெண்கள் காளைக்கு மஞ்சள் பூசி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதியாக முனியைய்யா கோவில் அருகில் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.