தேசிய மாணவர் படையினருக்கு மலையேற்ற பயிற்சி

ஊட்டியில் தேசிய மாணவர் படையினருக்கு மலையேற்ற பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-05-07 02:30 GMT

ஊட்டி

தேசிய மாணவர் படை சார்பில், அகில இந்திய அளவில் ஊட்டியில் 36-ம் ஆண்டு மலையேற்ற பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவிகள் 750 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் வரை பயிற்சி அளிக்கப்பட்டது. தினமும் மாணவிகள் 10 கி.மீ. தூரம் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர். இதனை கோவை மண்டல என்.சி.சி. அதிகாரி சிவாராவ் தலைமையில் கர்னல்கள் பதாக் சீனிவாசன், ஜெயந்த் மோகன் இமானுவேல், என்.சி.சி. அலுவலர்கள் ரேவதி, சுப்பிரமணியன், பசுவதேவன், பத்மநாபன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியின் போது தேயிலைத்தூள் உற்பத்தி, மலைக்காய்கறிகள் பயிரிடுதல், தாவரவியல் பூங்கா, ரேடியோ வானியல் மையம் போன்றவற்றை பார்வையிட்டனர். ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்தனர். முகாமில் தலைமை பண்பு, தேசிய ஒருமைப்பாடு, ஒழுக்கம், கூட்டு மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட மலையேற்ற பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் என்.சி.சி. மாணவிகள் 500 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்