நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

Update: 2023-06-09 16:56 GMT


மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று திருவண்ணாமலை ஒன்றியம் தென்மாத்தூர் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நெடுஞ்சாலைத் துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் தென்மாத்தூர் ஊராட்சி நெடுஞ்சாலையோரம் 120 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன்,

திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, முன்னாள் நகரமன்றத் தலைவர் ஸ்ரீதரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்