மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள்
மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம் கும்பினிபேட்டை மின் வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட சக்தி நகரில் உள்ள டிரான்ஸ்பார்மருக்கு வரும் மின்கம்பிகளில் மரக்கிளைகள் பல தெருக்களில் உரசியபடி உள்ளதால், அடிக்கடி தீப்பொறி ஏற்படுகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் அலட்சியமாக உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.