வீழ்வேன் என்று நினைத்தாயோ...

வீழ்வேன் என்று நினைத்தாயோ...;

Update: 2022-12-22 21:14 GMT

ஈரோடு மாநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிக்காக 40-க்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் வேராடு அகற்றப்பட்டன. இதில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள மரத்தை அகற்றுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்டன. அதன் அடிப்பகுதி இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. அதற்குள் தன்னை வெட்டியவர்களை பார்த்து "வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்று சொல்வதுபோல் வெட்டிய இடத்தில் இருந்தே புத்தம் புதிதாய் துளிர்விட்டு வளர்கிறது இந்த மரம்.

Tags:    

மேலும் செய்திகள்