திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் திருநங்கைகள் மோதல்; 11 பேர் மீது வழக்கு
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் திருநங்கைகள் மோதல் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி அரியமங்கலம் உக்கடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் கீர்த்தனா (வயது 20). திருநங்கையான இவர் தனது நண்பர்களுடன் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கைகளுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. அப்போது கீர்த்தனாவை மத்திய பஸ் நிலையத்திற்கு வரக்கூடாது என்று கூறி, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து கீர்த்தனா கொடுத்த புகாரின் அடிப்படையில், 11 திருநங்கைகள் மீது கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.