வேளாண் அலுவலகம் இடமாற்றம்

வேளாண் அலுவலகம் இடமாற்றம்

Update: 2023-08-17 19:45 GMT

ஆனைமலை

ஆனைமலை ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகம், கிடங்கு உள்ளது. இதன் கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளை கடந்ததால், மேற்கூரை சிதிலமடைந்து, பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்து, மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே வேறு இடத்துக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அருகில் உள்ள பள்ளி வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு வேளாண்மை அலுவலகம் செயல்பட போதுமான வசதிகள் இல்லை. இதனால் தோட்டக்கலைதுறை அலுவலகம் மட்டும் மாற்றப்பட்டது. ஆனால் வேளாண்மை அலுவலகம், ஆனைமலை ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட திருமண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.மேலும் புதிய கட்டிடம் கட்டும் வரை வேளாண் அலுவலகம் தற்காலிகமாக அங்கேயே செயல்படும் என்று வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்