3 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
3 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ கோட்டை போலீஸ் நிலையத்துக்கும், அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுசீலா சமூகநீதி மற்றும் மனிதஉரிமைகள் பிரிவுக்கும் (அயல்பணியாக மாநகர குற்றப்பிரிவு), கண்டோன்மெண்ட் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அகிலா காவல்கட்டுப்பாட்டு அறைக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா பிறப்பித்துள்ளார்.