19 துணைத்தாசில்தார்கள் இடமாற்றம்
நெல்லை மாவட்டத்தில் 19 துணைத்தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இ பிரிவு தலைமை உதவியாளர் முத்துலட்சுமி, ஜி பிரிவு தலைமை உதவியாளராகவும், நாங்குநேரி தலைமையிடத்து துணை தாசில்தார் வைகுண்டம், பாளையங்கோட்டை மண்டல துணை தாசில்தாராகவும், சேரன்மாதேவி மண்டல துணை தாசில்தார் மகாராஜன், நெல்லை உதவி கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திசையன்விளை துணை தாசில்தார் நக்கீரன், திசையன்விளை வட்ட வழங்கல் அலுவலராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் உள்பட 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கலெக்டர் விஷ்ணு பிறப்பித்துள்ளார்