18 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
திருவாரூர் மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மன்னார்குடி பகுதிக்கும், தஞ்சையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கவிதா நாகை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், கலைச்செல்வி மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார்குடி-பட்டுக்கோட்டை
மன்னார்குடி பகுதியில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், பட்டுக்கோட்டை பகுதியில் பணியாற்றிய ராஜேஷ் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் நிலையத்துக்கும், திருவிடைமருதூர் பகுதியில் பணியாற்றி வரும் ராமமூர்த்தி, பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை திருவெண்காடு போலீஸ் நிலையத்துக்கும், மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, ஏ.கே.சத்திரம் போலீஸ் நிலையத்துக்கும், மயிலாடுதுறை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்துக்கும், திருவாரூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும், திருவாரூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்துக்கும், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி சீர்காழி மதுவிலக்கு பிரிவுக்கும், பட்டுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்துக்கும், இங்கு பணியாற்றிய பிராங்ளின் உட்ரோ வில்சன் தஞ்சை மதுவிலக்கு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை சரகத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்துக்கும், திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் கோமதி தஞ்சைக்கும், மணல்மேடு இன்ஸ்பெக்டர் ஜீவராஜா மணிகண்டன் காத்திருப்போர் பட்டியலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.