14 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
கடலூர் மாவட்டத்தில் 14 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டுள்ளார்
கடலூர்
மாவட்டத்துக்குள்
கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள்ளேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தேவனாம்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்திற்கும், பரங்கிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கும், புதுச்சத்திரம் ஆனந்தகுமார் புவனகிரிக்கும், காடாம்புலியூர் சண்முகம் புத்தூருக்கும், வடலூர் ஜெயசங்கர் விருத்தாசலத்திற்கும், சங்கர் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், சிதம்பரம் டவுன் மணிகண்டன் காட்டுமன்னார்கோவிலுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லிக்குப்பம், வடலூர்
இதேபோல் காட்டுமன்னார்கோவில் மாணிக்கராஜா கம்மாபுரம் போலீஸ் நிலையத்திற்கும், புவனகிரி சந்தோஷ் நெல்லிக்குப்பத்திற்கும், நெல்லிக்குப்பம் பிரேம்குமார் காடாம்புலியூருக்கும், குள்ளஞ்சாவடி இளையராஜா ஆவினங்குடிக்கும், கம்மாபுரம் டைமன் துரை அண்ணாமலைநகருக்கும், மங்கலம்பேட்டை கனகராஜ் மருதூருக்கும், ஊமங்கலம் சிவகுருநாதன் வடலூர் போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பிறப்பித்துள்ளார்.