அஜித் படம் திரையிட தாமதம் ஆனதால் ரசிகர்கள் ரகளை

கிருஷ்ணகிரியில் நடிகர் அஜித் நடித்தே துணிவு படம் திரையிட தாமதம் ஆனதால் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள், இரும்பு கேட், கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-11 18:45 GMT

கிருஷ்ணகிரியில் நடிகர் அஜித் நடித்தே துணிவு படம் திரையிட தாமதம் ஆனதால் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள், இரும்பு கேட், கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

படங்கள் ரிலீஸ்

நடிகர் விஜய் நடித்த வாரிசு படமும், நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு படமும் பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியானது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில் அஜித் நடித்த துணிவு படம் நள்ளிரவு 1 மணிக்கும், விஜய் நடித்த வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 தியேட்டர்களில் வாரிசு படமும், 9 தியேட்டர்களில் துணிவு படமும் வெளியிடப்பட்டது. கிருஷ்ணகிரி நகரில் மொத்தம் உள்ள 7 தியேட்டர்களில் 4 தியேட்டர்களில் வாரிசு படமும், 3 தியேட்டரில் துணிவு படமும் திரையிடப்பட்டது.

ரகளை

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி காட்சியை பார்ப்பதற்காக அஜித் ரசிகர்கள் நள்ளிரவே கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் திரண்டனர். சென்னை சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் ஒரு மணி காட்சி திரையிட தாமதம் ஆனதால் தியேட்டர் முன்பு திரண்ட ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இரும்பு கேட்டை உடைத்தும், தியேட்டர் கண்ணாடியை உடைத்தும் அவர்கள் தகராறு செய்தனர்.

இதையடுத்து ரசிகர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கட்டுப்படுத்தினர். இதையடுத்து அதிகாலை 2.30 மணி அளவில் படம் திரையிடப்பட்டது. இதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு தியேட்டர்கள் முன்பு 2 நடிகர்களின் ரசிகர்களும் ஏராளமானோர் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்