மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தண்ணீரின் தரம் குறித்த பயிற்சி
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தண்ணீரின் தரம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஜல் ஜீவன் மிஷன் தகவல் தொடர்பு திட்டத்தின் கீழ் தண்ணீரின் தரம் குறித்து மகளிர் குழுவினருக்கு பயிற்சி அளிக்கும் முகாம் திருச்சிற்றம்பலத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளர் மோகன், உதவி நிர்வாக பொறியாளர்கள் ஆனந்தன், சிவசங்கரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 65 ஊராட்சிகளில் இருந்து மகளிர் குழுவினர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்களுக்கு நீரின் தரத்தை பரிசோதிப்பது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியை நீர் பகுப்பாய்வாளர்கள் பெருமாள், வெங்கடேசன் ஆகியோர் விளக்கி கூறினார்கள். அதனை தொடர்ந்து தண்ணீரின் திறன் மற்றும் தரம் பரிசோதிப்பது குறித்த கையேடுகள், பரிசோதனை பெட்டகம் வழங்கப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் செய்திருந்தனர்.