பொதுமக்களுக்கு முதலுதவி செய்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி

நெல்லையில் பொதுமக்களுக்கு முதலுதவி செய்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-05-06 19:00 GMT

விபத்து, மாரடைப்பு மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து நெல்லை மாவட்ட போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார். இதையொட்டி பாளையங்கோட்டையில் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாருக்கு நேற்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் டாக்டர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு போலீசாருக்கு பயிற்சி அளித்தனர். செயற்கை மனித உடல் மற்றும் மின்திரை மூலம் விபத்து மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்து கூறினர். பயிற்சியில் மாவட்ட ஆயுதப்படை துணை சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்