கோத்தகிரி அருகே காய்கறி பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி கிராமத்தில் காய்கறி பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி கிராமத்தில் காய்கறி பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இயற்கை வேளாண்மை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் காய்கறி பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்த உள் மாவட்ட அளவிலான பயிற்சி கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி கிராமத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சியில் வட்டாரத் தோட்டக்கலை அலுவலர் ஐஸ்வர்யா தலைமை வகித்து தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். முன்னோடி விவசாயி ராமதாஸ் கலந்து கொண்டு இயற்கை இடுபொருட்களின் பயன்பாடு குறித்து விளக்கினார்.
தொழில்நுட்ப பயிற்சிகள்
உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரவீனா இயற்கை இடு பொருட்களான பஞ்சகாவியா தயாரிப்பு முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலா, அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப பயிற்சிகள் குறித்து விளக்கி பேசினார்.
முன்னதாக உதவி தோட்டக்கலை அலுவலர் ஜீவா அனைவரையும் வரவேற்றார். இந்த பயிற்சியில் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முடிவில் விவசாய குழு செயலாளர் ராம்குமார் நன்றி கூறினார்.
---
Image1 File Name : 11556571.jpg
---
Image2 File Name : 11556572.jpg
---
Image3 File Name : 11556573.jpg
----
Reporter : S.MAHESH KUMAR Location : Coimbatore - KOTAGIRI