விவசாயிகளுக்கு கறவைமாடு வளர்ப்பு குறித்த பயிற்சி

வேலூரில் விவசாயிகளுக்கு கறவைமாடு வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-08-18 18:29 GMT

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு, ஆடுகள் வளர்த்தல் தொடர்பான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் முனியப்பன் முன்னிலை வகித்தார்.

பயிற்சி முகாமில் தீவன பராமரிப்பு, கன்று பராமரிப்பு, கால்நடைகளுக்கு நோய்கள் தடுப்பு, பால் பொருட்கள் உற்பத்தி குறித்து எடுத்து கூறப்பட்டது. மேலும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் குறித்தும் அவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்