மின் பாதுகாப்பு குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி
மின் பாதுகாப்பு குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருமயம்:
திருமயத்தில் மின்சார பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் செயற்பொறியாளர் ஆனந்தாயி தலைமையில் நடைபெற்றது. முகாமில் தஞ்சை ெதாழில்நுட்ப பயிற்சி மைய உதவி பொறியாளர் அப்துல்காதர் கலந்து கொண்டு பேசுகையில், பணியாளர்களின் கவனக்குறைவால் பல விபத்துகள் நடைபெறுகிறது. கையுறை, செருப்பு, கயிறு, மரக்கட்டை, டெஸ்டர் ஆகியவற்றை தவறாமல் பயன்படுத்த வேண்டும். தரமான மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். மீட்டர் இணைப்புகளை சரியாக கொடுக்க வேண்டும். மின்மாற்றி, மின் கம்பங்கள் பணிகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும், என்றார். பயிற்சி மைய உதவி பொறியாளர்கள் அருள்மேரி, சத்தியசீலன், காளிதாஸ் ஆகியோர் பேசினர். திருமயம் கோட்டை பகுதியை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர் ராமநாதன், உதவி பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.