பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி கூட்டம்

பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி கூட்டம்

Update: 2023-07-23 19:45 GMT

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை வட்டார வள மையத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்புக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. இதை வட்டார கல்வி அலுவலர் பிரான்ஸிஸ் சார்லஸ் தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் முகம்மது ரபி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர்கள் ஷோபனா, சோபியா ஆகியோர் பயிற்சியை ஒருங்கிணைத்தனர். கருத்தாளர்களாக மேட்டுலட்சுமிநாயக்கன்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணசாமி, நந்திபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி, பெரிய சேடபாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் ராதாமணி, கள்ளப்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவம் ஆகியோர் பங்கேற்று பள்ளியின் சுகாதாரம், மாணவ-மாணவிகளின் ஆரோக்கிய மேம்பாடு பற்றி ஆசிரியர்கள் 60 பேருக்கு பயிற்சி அளித்தனர். முடிவில் தாளக்கரை பள்ளி தலைமை ஆசிரியர் மயில்சாமி நன்றி கூறினார். முன்னதாக கற்றல், கற்பித்தல் குறைபாடுகளை தீர்த்தல் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்க அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்