தியாகதுருகம் அருகே பருத்தி சாகுபடி பயிற்சி

தியாகதுருகம் அருகே பருத்தி சாகுபடி பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-03-11 18:45 GMT

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே பழைய உச்சிமேடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பருத்தி பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் சந்துரு கலந்து கொண்டு பருத்தி பயிரில் பாதிப்பு ஏற்ப்படுத்தும் சாறு உறுஞ்சும் பூச்சிகள், பருத்தி பயிரைத் சேதப்படுத்தும் புழு வகைகள் மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பூச்சிகள் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களுக்கு விவசாயிகளை அழைத்துச் சென்று பருத்தியை தாக்கும் பூச்சிகளை அடையாளம் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி, சூரியா, உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவி மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்