பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 3-ம் கட்டமாக பெரம்பலூர் ராமகிருஷ்ணா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பாடாலூர் மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் பழனிவேல் ராஜன், பாடாலூர் மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர்கள் விஜயலட்சுமி, உமா, பெரம்பலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நாள் பயிற்சியான நேற்று மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) அண்ணாதுரை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார். பாடாலூர் மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 8 கருத்தாளர்கள் கலந்து கொண்டு 123 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடைபெறுகிறது.