பஞ்சாயத்து வார்டு உறுப்பினா்களுக்கு பயிற்சி

வள்ளியூர் யூனியனில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினா்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

Update: 2022-08-27 19:00 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியனில் உள்ள 18 பஞ்சாயத்துகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு வள்ளியூர் யூனியன் கூட்ட அரங்கில் நடந்தது. வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். வள்ளியூர் யூனியன் ஆணையாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் மறைமலைநகர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன இயக்குனர் உத்தரவின்படி வள்ளியூர் யூனியனைச் சேர்ந்த 18 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 180 வார்டு உறுப்பினர்களுக்கு ஐந்து பிரிவுகளாக அடிப்படை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. பயிற்சி வகுப்பை தெற்கு கல்லுப்பட்டியை சேர்ந்த மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன பயிற்சியாளர்கள் அதிசயமணி, விமலா, பிரபாவதி. மீனாட்சி, ஸ்ரீபரிமளா, ஸ்நோபிள் ஜெரோம் ஆகியோர் நடத்தினர். இதில் வள்ளியூர் யூனியனுக்குட்பட்ட 18 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்