ஆசிரியர்களுக்கு கருத்தாளர்களுக்கான பயிற்சி

ஆசிரியர்களுக்கு கருத்தாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-06-24 19:17 GMT

பாடாலூர்:

பாடாலூரில் உள்ள பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறை, பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் செயல்முறைகள்படி உயிர் கல்வி, வேலை வாய்ப்பு வழிகாட்டி கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற இந்த பயிற்சிைய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகணன் தலைமையில் மாநில கருத்தாளர்கள் சீரங்கன், ராஜரத்தினம், அறிவேந்தன், முத்தமிழ்செல்வன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 250 மாணவர்களுக்கு ஒரு முதுநிலை ஆசிரியர் வீதம் 52 முதுநிலை ஆசிரியர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் மூலம் மாவட்டத்தில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் விரும்பிய உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. பயிற்சியின் முடிவில் ஆசிரியர் காமராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்