இடைநிலை-பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்; நாளை தொடங்குகிறது

இடைநிலை-பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.

Update: 2023-08-22 18:33 GMT

மத்திய மற்றும் மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை(வியாழக்கிழமை) முதல் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இதற்கு கடவுச்சீட்டு அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 04329-228641 மற்றும் 9499055914 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்