கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா

தர்மபுரியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

Update: 2023-05-17 16:41 GMT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி பிரிவு சார்பில் மாணவ, மாணவிகளுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தடகளம், கால்பந்து, ஆக்கி, வாலிபால், ஜிம்னாஸ்டிக், சிலம்பம், கபடி ஆகிய விளையாட்டுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமின் நிறைவு விழா தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் கபடி பயிற்சியாளர் பியாரா வரவேற்றார். விழாவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் கலந்துகொண்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற 350 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த கோடைகால பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி செய்திருந்தார். முடிவில் கைப்பந்து பயிற்சியாளர் தினேஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்