பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-01-07 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய கூட்ட அரங்கில், இந்திய வேளாண்மை வானிலை ஆராய்ச்சி திட்டத்திற்குட்பட்ட ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மூலம், ஓட்டப்பிடாரம் தாலுகா ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ள மானாவாரி பருத்தி விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கி, மானாவாரி பருத்தி சாகுபடி தொழில்நுட்பம் பற்றிய கையேட்டையும், இடுபொருட்களையும் விவசாயிகளுக்கு வழங்கினார்.

முகாமில் உதவி பேராசிரியர் புவனேஸ்வரி, பருத்தி சாகுபடியின் உழவியல் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். இணை பேராசிரியர் சீபா மானாவாரி பருத்தி ரகங்கள், வீரிய ஒட்டு ரகங்கள் பற்றியும், தொழில்நுட்பம் பற்றியும் பேசினார். பேராசிரியர் கோகுல வாணி மானாவாரி பருத்தியில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்