திருவாடானை அரசு கல்லூரியில் பயிற்சி முகாம்
திருவாடானை அரசு கல்லூரியில் பயிற்சி முகாம் நடந்தது.
தொண்டி,
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தன் முன்னேற்ற பயிற்சி முகாம் கல்லூரி (பொறுப்பு) முதல்வர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் தேவகோட்டை ஸ்ரீசேவகன் அண்ணாமலை கலைக்கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் கரு.முருகன், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஆனிமுத்து வெற்றிவேலன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் கல்லூரி மாணவ, மாணவியர், கவுரவ விரிவுரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.