ஆலங்குளம்,
வெம்பகோட்டை ஒன்றியம் கங்கர் செவல் கிராமத்தில் வெம்பக்கோட்டை வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டசத்து இயக்கத்தின் கீழ் காரி பருவத்திற்கான முன்பருவ விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வெம்பக்கோட்டை வேளாண்மைதுறை உதவி இயக்குனர்.முத்தையா தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை வேளாண்மைதுறை அலுவலர் அன்னபூரணி, உதவி வேளாண்மைதுறை அலுவலர்கள் முத்து சரவணன், கங்கா, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மேற்பார்வையாளர் வேல்முருகன், விதை சான்று அலுவலர் ரேவதி, உதவி விதை சான்று அலுவலர் சுந்தரராஜ். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் முத்து செல்வி, ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முகாமில் கங்கர் செவல் மற்றும் சுற்றுபுற விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.