புதிய ரக நிலக்கடலை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

Update: 2023-01-12 18:45 GMT


பென்னாகரம்:

பென்னாகரம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் கோடுப்பட்டி கிராமத்தில் புதிய ரக நிலக்கடலை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கான செயல்முறை விளக்க முகாம் நடந்தது. முகாமில் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் அதிக எண்ணெய் சத்துகள் நிறைந்த புதிய ரகமான கதிரி லிபாக்சி நிலக்கடலையை சாகுபடி செய்வது தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்து செயல்முறை மூலம் விளக்கமளிக்கப்பட்டது. இதில் உதவி வேளாண்மை அலுவலர் முருகேசன், தொழில்நுட்ப மேலாளர் அசோக்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் கலை பிரியா ஆகியோர் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். முகாமில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

மேலும் செய்திகள்