புறப்பட்ட சில நிமிடங்களில் நிறுத்தப்பட்ட மன்னார்குடி-மானாமதுரை பயணி

நீடாமங்கலம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீடாமங்கலத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மன்னார்குடி-மானாமதுரை பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் புறப்பட்டு சென்றது.

Update: 2022-12-09 19:00 GMT

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீடாமங்கலத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மன்னார்குடி-மானாமதுரை பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் புறப்பட்டு சென்றது.

தண்டவாளத்தில் ேகாளாறு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக மானாமதுரைக்கு பயணிகள் ெரயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினமும் நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு காலை 6.50 மணிக்கு வந்து 10 நிமிடங்கள் கழித்து 7 மணிக்கு புறப்பட்டு செல்லும்.நேற்று வழக்கம்போல் இந்த ரெயில், நீடாமங்கலம் ெரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. கோரையாறு பாலம் அருகே ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரெயில் நிறுத்தப்பட்டது

உடனடியாக ரெயிலை நிறுத்திய என்ஜின் டிரைவர் (லோகோ பைலட்) கீழே இறங்கி வந்து தண்டவாளத்தை பார்த்தார். அப்போது தண்டவாளத்தில் இணைக்கப்பட்டிருந்த எர்த் பட்டை கம்பியின் இணைப்பு கழன்று வெளியில் நீட்டிக்கொண்டிருந்தது.இதனைத்தொடர்ந்து ரெயில்வே கேட் கீப்பர்கள் அங்கு விரைந்து வந்தனர். ரெயில்வே மின் ஊழியர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

20 நிமிடங்கள் தாமதம்

ரெயில்வே கேட் கீப்பர்கள் மற்றும் மின் ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த கோளாறை சரி செய்தனர். இதன்பிறகு சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. திடீரென ரெயில் நிறுத்தப்பட்டதால் நீடாமங்கலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் அடிக்கடி அதிவேகமாக செல்வதால் தண்டவாள இணைப்பு கழன்று எர்த் பட்டை கம்பிகள் தரைப்பகுதியில் இருந்து மேல் நோக்கி பெயர்ந்திருந்தது. இது குறித்து ரயில்வே மின்மய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையிலேயே கோளாறு சரி செய்யப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்