பாம்பன் பாலத்தில் மறுஅறிவிப்பு வரும் வரை ரெயில் சேவை நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து தடை மறுஅறிவிப்பு வரும் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து தடை மறுஅறிவிப்பு வரும் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைந்துள்ள ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் கடந்த 23-ந் தேதி இரவில் ரெயில் செல்லும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், . ஜனவரி 10 வரை பாம்பன் பாலத்தில் ரெயில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் மறுஅறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்வதற்கான தடை நீட்டிப்பதாக மதுரை கோட்ட ரெயில்வே அறிவித்துள்ளது.