நல்லம்பள்ளி அருகே ரெயில்வே கேட் பராமரிப்பு பணி; போக்குவரத்துக்கு தடை

Update: 2022-12-19 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தேவரசம்பட்டியில், தர்மபுரி கலெக்டர் பங்களாவிற்கு செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இதன் வழியாக சேலம்-பெங்களூர் மார்க்கத்தில் தினமும் பல்வேறு ரெயில்கள் செல்கின்றன.

இந்தநிலையில் நேற்று அந்த ரெயில்வே கேட் பகுதியில் ரெயில்வே துறை சார்பில் வருடாந்திர பராமரிப்பு பணி நடந்தது. இதற்காக கேட் அடைக்கப்பட்டது. தொடர்ந்து தண்டவாளத்தில் கிடந்த பழைய ஜல்லி கற்கள் அகற்றப்பட்டு, புதிய கற்கள் கொட்டப்பட்டன. தொடர்ந்து ரெயில்வே கேட்டுக்கு வர்ணம் பூசப்பட்டது.

இந்த பணி காரணமாக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மாற்று வழியில் சற்று சிரமத்துடன் பயணித்தனர்.

மேலும் செய்திகள்