அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக 6 சிறப்பு ரெயில்கள்
அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து 6 சிறப்பு ரெயில்கள் கேரள மாநிலம் கொல்லத்துக்கு இயக்கப்படுகிறது.
அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து 6 சிறப்பு ரெயில்கள் கேரள மாநிலம் கொல்லத்துக்கு இயக்கப்படுகிறது.
அய்யப்ப பக்தர்கள்
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து வருகிற 23-ந் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூர்-கொல்லம் சிறப்பு ரெயில் (எண்.06061) 23-ந் தேதி மதியம் 3.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு கொல்லத்துக்கு சென்று சேருகிறது.
இந்த ரெயில் வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு சேலத்துக்கும், இரவு 9.30 மணிக்கு ஈரோட்டுக்கும், 10.10 மணிக்கு திருப்பூருக்கும், 11.30 மணிக்கு போத்தனூருக்கும் செல்லும்.
கொல்லம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (எண்.06062) வருகிற 24-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 26-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வியாழக்கிழமை காலை 8.45 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இந்த ரெயில் போத்தனூருக்கு வியாழக்கிழமை மாலை 4.55 மணிக்கும், திருப்பூருக்கு 6 மணிக்கும், ஈரோட்டுக்கு 7 மணிக்கும் செல்லும்.
சென்னை-கொல்லம் ரெயில்
சென்னை எழும்பூர்-கொல்லம் (எண்.06063) சிறப்பு ரெயில் நேற்று முதல் வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. அதுபோல் கொல்லம்-சென்னை எழும்பூர் (06064) சிறப்பு ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற ஜனவரி மாதம் 29-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர்-கொல்லம் சிறப்பு ரெயில் (06065) வருகிற 21-ந் தேதி மதியம் 3.30 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரெயில் ஜனவரி மாதம் 23-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. கொல்லம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06066) வருகிற 22-ந் தேதி காலை 8.45 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னையை சென்றடையும். இந்த ரெயில் ஜனவரி மாதம் 24-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.