ஆசிரமத்தில் இருந்து மாயமான 16 பேர் என்ன ஆனார்கள்:உடல் உறுப்புகளை திருடுவதற்காக கடத்தல்?

ஆசிரமத்தில் இருந்து மாயமான 16 பேர் என்ன ஆனார்கள் என்று தொியாத நிலையில் உடல் உறுப்புகளை திருடுவதற்காக கடத்தப்பட்டாா்களா என்று விசாரணை நடக்கிறது.

Update: 2023-02-15 18:45 GMT


விக்கிரவாண்டி குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் திருப்பூரை சேர்ந்த ஹனிதீன் என்பவர் விட்டு சென்ற ஜாபருல்லா(45) என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயமானார். இதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையின்போது, ஆசிரமம் குறித்த சர்ச்சை பூதாகரமாக எழுந்துள்ளது.

போலீஸ் விசாரணையில், ஜாபருல்லா விழுப்புரத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள். இவ்வாறு அனுப்புவது என்பது சட்டத்தை மீறிய செயல் ஆகும். இதேபோன்று 16 பேர் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள் இல்லை. இந்த ஆசிரமத்துடன் தொடர்பில் பெங்களூருவில் இயங்கி வரும் மற்றொரு ஆசிரமத்தில் இருந்து தான் 16 பேர் மாயமாகி இருக்கிறார்கள். ஆனால், பெங்களூரு ஆசிரமம் தரப்பில் இந்த தகவலை மறுத்து வருகிறார்கள்.

இதனால், மாயமான 16 பேர் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை. இவர்கள் உடல் உறுப்புகளை திருடுவதற்காக கடத்தப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதனடிப்படையில் போலீசார் துரித விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஆசிரம நிா்வாகி ஜூபின்பேபி கைது செய்யப்பட்டு, அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் பிறகே இந்த வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்