புதிய பாலம் அமைக்கும் பணிக்காக போக்கு வரத்து மாற்றம்

திருவலத்தில் புதிய பாலம் அமைக்கும் பணிக்காக போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-04-08 17:59 GMT

திருவலம் பேரூராட்சியில் பஸ் நிலையம் அருகே சாலை விரிவாக்கத்திற்காக சிறு பாலம் அமைக்கும் பணி நாளை (திங்கட்கிழமை) முதல் நடைபெற உள்ளது. அதற்கான ஆய்வு பணி உதவிப் பொறியாளர் பூவரசன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

திருவலம் பேரூராட்சி அறிஞர் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள பொன்னையாற்று நீர் பாசன கால்வாய் பாலம் சீரமைப்பு, சாலை விரிவாக்கம் ஆகிய பணிகள் நாளை முதல் நடைபெற உள்ளதால் காட்பாடி, பொன்னை, சித்தூர் ஆகிய வழித்தடங்களில் இருந்து திருவலம் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் திருவலம் இரும்பு பாலத்தை பயன்படுத்துமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்