துணை மின்நிலையத்திற்கு ராட்சத மின் கருவி கொண்டு சென்றபோது போக்குவரத்து பாதிப்பு

துணை மின்நிலையத்திற்கு ராட்சத மின் கருவி கொண்டு சென்றபோது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-04 16:34 GMT

விருதுநகர், ஜூன்.5-

விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் துணைமின் நிலைய அமைப்பு பணி நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையம் 765 கிலோ வாட் சக்தி கொண்டது. தமிழகத்தில் இதுவரை அனைத்துப் பகுதிகளிலும் 400 கிலோவாட் சக்தி கொண்ட துணை மின் நிலையங்களே அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது முதல் முறையாக இங்கு அதிக சக்தி வாய்ந்த துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இத்துணை மின் நிலையத்திற்காக ராட்சத ரியாக்டர் என்ற கருவி லாரியில் ஏற்றிக் கொண்டு வரப்பட்டது.

விருதுநகரில் இருந்து பாலவனத்தம் வழியாக பொம்மையாபுரத்திற்கு இந்தகருவி ஏற்றப்பட்டிருந்த லாரியை கொண்டு செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் முன்னேற்பாடு நடவடிக்கை எடுத்து இருந்தபோதிலும் விருதுநகர்- அருப்புக்கோட்டை ரோட்டில் பாலவனத்தம் அருகே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்