அரசு பஸ் பழுதால் போக்குவரத்து பாதிப்பு
அரசு பஸ் பழுதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி மேம்பாலம் வழியாக ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் இப்பகுதியில் சிமெண்டு மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களும் அதிகம் உள்ளதால் தினந்தோறும் ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன. இதனால் எப்போதும் வாகனங்கள் நிறைந்த பகுதியாக மேம்பாலம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை மேம்பாலம் கீழே பயணிகளை ஏற்றி வந்த அரசு பஸ் திடீரென பழுதாகி நின்றது. இதனால் அதிக அளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு பஸ் பழுது நீக்கி எடுத்து சென்றனர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது.