போக்குவரத்து விழிப்புணர்வு வாரம்

வாணியம்பாடியில் காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் நடைபெற்றது.

Update: 2023-02-14 19:20 GMT

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் தொடங்கி வருகிற 18-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக வாணியம்பாடியில் தாலுகா போலீஸ் நிலையம் சார்பில் மேட்டுப்பாளையம் கூட்ரோடு மற்றும் செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் திருப்பத்தூர் கிராமிய நடன கலை குழுவினர் மூலம் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் தலைமையில் சப்- இன்ஸ் பெக்டர் மஞ்சுநாதன், தனிப்பிரிவு ஏட்டு மூர்த்தி மற்றும் போலீசார் கலந்துகொண்டு ஹெல்மெட் அவசியம், குடிபோதையில் வாகனம் இயக்க வேண்டாம், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுவதை தவிர்க்கவும், விபத்தில்லா பயணம் மேற்கொள்ளவும் ஆகியவைகள் குறித்து துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீசார் இனிப்புகள் வழங்கினர்.

இதே போன்று அம்பலூர் போலீசார் சார்பில் விபத்தை தடுத்திடும் வகையில் புத்துக்கோயில் சர்வீஸ் ரோட்டில் இருபுறமும் வேகத்தடை அமைத்தும், போக்குவரத்து விதிகள் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்