போக்குவரத்து தானியங்கி சிக்னல் தொடக்க விழா
கோவில்பட்டியில் போக்குவரத்து தானியங்கி சிக்னல் தொடக்க விழா நடைபெற்றது.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி போலீஸ் சப் டிவிஷன் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் எட்டயபுரம் சந்திப்பு சாலையில் தானியங்கி சிக்னல் செயல்பாடு தொடக்க விழா நடைபெற்றது.
எட்டயபுரம் நெடுஞ்சாலை-புதுரோடு- கால்நடை மருத்துவமனை சாலை சந்திப்பில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல் மற்றும் நவீன் கண்காணிப்பு கேமரா செயல்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு தாகத்தை தீர்க்கும் பொருட்டு குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். பைரவா மஹால் அபிராமி முருகன் தானியங்கி சிக்னலை இயக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர் கண்காணிப்பு கேமராவை இயக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.
இதில் ரோட்டரி கிளப் தலைவர் வெங்கடேஷ், கணேஷ் பேக்கரி ரவி மாணிக்கம், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், சத்யா, ரவீந்தர், போக்குவரத்து தலைமை காவலர் ஸ்டீபன் இளையராஜா, போக்குவரத்து துணை ஆய்வாளர்கள் செல்வகுமார், ஆரோக்கிய ஜென்ஸி, அங்கு தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.